சரும பராமரிப்பில் அழகை மேம்படுத்தும் இந்துப்பு!

வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (00:34 IST)
பொதுவாக இந்துப்பு சமையலுக்கு பயன்படுகிறது என்றே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அதனை தாண்டியும் இந்துப்புவை கீழ்கண்ட முறைகளில் நாம் பயன்படுத்த முடியும்.
 
இயற்கையாக கிடைக்கும் இந்துப்பு என்பது நமது இளமையை தக்கவைக்கவும் உதவுகிறது. உடல் வயதடையும் தன்மையை மாற்றி  பொலிவுடன் திகழ செய்கிறது.
 
 
இந்துப்பு மூலம் இப்போது சோப் தயாரிக்கப்படுகிறது. அதன் மூலம் உங்கள் உடலை வலிகள் இல்லாமல் புத்துணர்வோடு வைத்து  கொள்ளலாம்.
 
சருமத்தை இதமாக உணர வைத்து குணமாக்குவதில் இந்துப்பு முதலிடம் வகிக்கிறது. அதை போலவே உடலில் உள்ள எண்ணெய் தன்மையை  சரி செய்து நீரின் அளவு குறையாமலும் பார்த்துக் கொள்கிறது. நான்கு ஸ்பூன் தேன் உடன் இரண்டு ஸ்பூன் நன்கு பொடித்த இந்துப்புவை  கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி உலரவைத்து பின்னர் கழுவி விடுங்கள்.
 
உடலில் உள்ள இறந்த செல்களை நீக்குவதில் இந்துப்பு பயன்படுகிறது. இதில் உள்ள கனிமங்கள் சருமத்தை இதமாக உணரவைக்கிறது. உடலில் உள்ள நீர்த்தன்மையை பாதுகாக்கிறது.
 
தலைமுடியை பகுதிகள் பகுதிகளாக பிரித்து அதில் கொஞ்சம் உப்பை தூவுங்கள். பின்னர் ஈரமான விரல்களால் மெல்ல மசாஜ் செய்யுங்கள்.  பொடுகு போய்விடும்.
 
குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணையை இந்துப்புவோடு கலந்து உடல் முழுக்க தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்து பாருங்கள். உடல் வலி நீங்கி புத்துணர்வோடு இருப்பீர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்