தலைமுடி பராமரிப்பு

சனி, 18 ஜூன் 2016 (21:00 IST)
வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில் ஊறப் போடவும். மறுநாள் காலை அதை ‌விழுதாக அரை‌த்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவும், பிறகு கடலை மாவு கொண்டு தலையை அலசவும்.


 

 
வினிகரைத் தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து அலசலா‌ம்.
 
வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலா‌ம்.
 
இரண்டு முட்டைகளை உடைத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்க்கவும். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலா‌ம்.
 
வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசவும்.
 
சீயக்காய், சிறிது துளசி மற்றும் செம்பருத்தி இவற்றை கலந்து தலையில் தேய்த்து 30 நிமிடம் ஊறிய பிறகு தலையை அலசவும்.
 
நெல்லிக்காய் பொடியுடன், நீர் மற்றும் சர்க்கரை சேர்த்து அருந்தி வரவும், முடி வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும்.
 
செம்பருத்தியை ‌விழுதாக அரைத்து தலையில் தேய்க்க, 15-20 நிமிடங்கள் கழித்து அலசுக.
ஊற வைத்த வெந்தயம், சீயக்காய் தூள், நெல்லிக்காய் பொடி, காய்ந்த எலுமிச்சை அல்லது எலுமிச்சை தோல், 2 முட்டைகள் ஆகியவற்றை நன்றாகக் கலந்து கூழ் போல் செய்யவும். இதை தலையில் தேய்த்து 20 நிமிடம் பொறுத்திருந்து தலையை ஷாம்பூ மூலம் அலசவும்.
தலையில் எலுமிச்சையை நன்றாகத் தேய்த்து 30 நிமிடம் காத்திருக்கவும், பிறகு ஷாம்பூ மூலம் அலசவும், 2 அல்லது 3 வாரங்களுக்கு இதைச் செய்தால் முடி மீண்டும் கறுகறுவென வளரத் தொடங்கும்.
 
தேயிலை சிலவற்றை எடுத்துக் கொண்டு தண்ணீரில் கொதிக்க விடவும், தேநீரை எடுத்துவிட்டு அதனுடன் எலுமிச்சை சாறை சேர்த்து கலந்து தலைமுடியை நன்றாக அலசவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்