ஆவாரம் பூவை தினமும் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மை

சனி, 1 ஜனவரி 2022 (23:58 IST)
ஆவாரம்பூ, பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகியவற்றை கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில்   குடித்துவர வறண்ட சருமம் மாறும். 
 
ஆவாரம் பூவை தினமும் தூங்குவதற்கும் சாப்பிட்டு படுத்தால் உடல் தங்க நிறம் பெறுமாம். ஆவாரம்பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதனையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் சருமம் பொலிவு பெறும்.
 
முடிக் கொட்டுவதைத் தடுக்க ஆவாரம் பூ செம்பருத்தி, தேங்காய்ப் பால் சம அளவு எடுத்து அரைத்து வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து  குளித்து வர முடி கொட்டுவது உடனே நிற்கும். கூந்தலும் நன்கு வளரும். 
 
பெண்களுக்கு முகத்திலுள்ள தேவையில்லாத முடிகளை நீக்க, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலான் கிழங்கு இம்மூன்றையும் சம அளவு எடுத்து பசை போன்று செய்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்திலுள்ள தேவையில்லாத முடிகள் உதிர்ந்து பார்ப்பதற்கு   வசீகரமாக இருக்கும். 
 
ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் சேர்த்து உடலில் தேய்த்து உலர்ந்த பின் கடலைமாவைக் கொண்டு கழுவி வர உடலில்  உள்ள வறட்சி நீங்கி மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்