இரவில் செய்யக்கூடாத விஷயங்கள்.....

செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (20:59 IST)
இரவு நேரத்தில் குறிப்பாக சில காரியங்களை செய்யக் கூடாதாம். அப்படி செய்தால் உடல் மற்றும் மன நலன் இரண்டிலும் பல்வேறு பிரச்சனைகள். இரவு நேரத்தில் அப்படி என்ன செய்யக்கூடாது என்பதை கீழே பார்ப்போம்.


 

 
இரவு நேரத்தில் சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் செல்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். பெரும்பாலும் இரவு நேரத்தில் பாஸ்ட்புட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
 
இரவு நேரத்தில் யாருடனும் சண்டை போடாதீர்கள். ரிலாக்ஸ்சாக தூங்கச் செல்லுங்கள். அடிக்கடி சினிமா இரவு காட்சி பார்ப்பதை தவிர்க்கவும். இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை தவறில்லை. அடிக்கடி இரவு காட்சி பார்ப்பதை தவிர்க்கலாம்.
 
இரவு தூங்கச் செல்வதற்கு முன் சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பு டிவி அல்லது மொபைல் போன் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும். தூங்கும் போது இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்கவும்.
 
இரவு உறங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள். படுக்கைக்கு அருகில் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
 
இருட்டில் உறங்குவதுதான் நல்லது. அப்போதுதான் ஹார்மோன் சீராக சுரக்கும். அதிக வெளிச்சத்தில் உறங்குவதை தவிர்க்கவும்.
 
இந்த விஷயங்களை இரவு நேரத்தில் தவிர்த்து வந்தால் உடல் மற்றும் மன நலன் ஆகிய இரண்டும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்