புண்ணிய தலமான காசி விசுவநாதர் கோயில் தல வரலாறு!!

ஜோதிர் லிங்கத் தலம் - முக்தித் தரும் தலங்கள் ஏழனுள் ஒன்று. தம் வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒரு முறையேனும்  காசிக்குச் சென்று வழிபட வேண்டிய புண்ணிய தலம். இங்கே ஓடும் புண்ணிய நதியான கங்கையில் 84 படித்துறைகள் உள்ளன. இவற்றுள்ளும் 1. அசிசங்கம காட், 2. தசாசுவமேத காட், 3. மணிகர்ணிகா காட், 4. பஞ்சகங்கா காட், 5. வருணா சங்கம காட்  ஆகிய ஐந்தும் மிக சிறப்புடையவை.

 
'காசியில் இறக்க முத்தி' என்பதற்கு ஏற்ப "அரிச்சந்திர காட்"டில் பிணங்கள் எரிந்து கொண்டிருப்பதைக் கண் கூடாகக் காணலாம். இத்தலத்திற்கு இறந்து போவதற்கென்றே வருவோர் ஏராளம் பேர். நாள்தோறும் இரவு 7.30 மணியளவில் விசுவநாதர் சந்நிதியில்  நடைபெறும் சப்தரிஷி பூசை நடக்கிறது.
 
விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும். காசி விசுவநாதர் கோயில் என்பது மிகவும் புகழ்வாய்ந்த  சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் இடத்தில் அமைந்துள்ளது.  வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும் பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி  விசுவநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது.
 
தசாஸ்வேமேத் நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெருக்கோயில் பக்கம் செல்கிறது. இந்தக்கோயில் 1785இல் மகாராணி அகல்யா பாயினால் கட்டப்பட்டது. இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும்  தலையை குனிந்துகொள்கின்றனர்.
 
சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும்போது அவர் தலையில் கங்கை  நீரை ஊற்ற வைத்தும், ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது. பூஜை நடக்கும்போது நூற்றுக்கணக்கான மணி  ஓசைகளும், மேள தாளங்களும் வாசிக்கும்போது கோயிலின் உள்ளே நுழைய மிகவும் உற்சாகம் கொடுக்கிறது.
 
இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சிவலிங்கம் காசியில்  பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது. காலையிலும் மாலையிலும் விசுவநாதருக்குப் பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி விசுவநாதரால் காசி முக்கிய ஸ்தலமாக இருக்கிறது. கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.
 
வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் தினமும் கங்கை ஆறுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்பெறுவது  கண்கொள்ளாக்காட்சியாகும். இந்நிகழ்வைக் கங்கா ஆர்த்தி என்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கங்கா ஆர்த்தியை  ஆர்வமுடன் பார்க்க வருகின்றார்கள்.
 
இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் கோவிலுக்குள் வரவேண்டும். டவுசர், கை பகுதி  இல்லாத மேல் சட்டை அணிந்து கோவிலுக்குள் வர அனுமதி கிடையாது.

வெப்துனியாவைப் படிக்கவும்