.இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கான ஷூட்டிங் தற்போது சென்னை பல்லாவரத்தில் நடந்து வருகிறது. இந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் இயக்கி வருகிறார். இதில் நடித்து வந்த நடிகர் விஷால், எதிர்பாராத விதமான காலில் காயம் அடைந்து கீழே விழுந்தார். உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தற்போது அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,விஷால் காயம் அடைந்ததால் அவர் சம்மந்தப்பட்ட ஷுட்டிங் நிறுத்தப்பட்டது. அதனால் இப்படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதிரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படம் வரும் செப்டமர் 15 ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.