எட்டாக்கனியாக மாறிக் கொண்டிருக்கிறது ஏழைகளின் ரதம். ஆண்டுக்கு 10 சதவிகிதம் கட்டண உயர்வு, டைனமிக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை, ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் (Cancellation) கட்டணம் தொடர்ந்து உயர்வு, ஏழைகள் பயணிக்கவே முடியாத பகட்டான ரயில்களின் படங்களைக் காட்டி மக்களை ஏமாற்றியது, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டணச் சலுகையைப் பறித்தது, ஏழைகள் பயணிக்கும் ரயில்களை நிறுத்திவிட்டு, விளம்பரத்திற்காக இயக்கப்படும் ரயில்களுக்கு முக்கியத்துவம், குளிர்சாதன (ஏசி) ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஏழைகள் பயணிக்கும் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு என பத்தாண்டு பாஜக ஆட்சியில் மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்குத் தமிழ்நாட்டைத் துச்சமெனத் தூக்கி எறிந்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒரு முகமும் தேர்தலுக்குப் பிறகு இன்னொரு முகமும் காட்டியிருக்கிறது மத்திய பாஜக அரசு.