தயாராகுங்கள்... வருகிறது தி லயன் கிங்

வியாழன், 29 செப்டம்பர் 2016 (17:28 IST)
அனிமேஷன் படங்களில் முதல் உலகளாவிய சக்சஸ் என்று லயன் கிங் படத்தை சொல்லலாம். 2டி அனிமேஷன் படமான இதனை லைவ் ஆக்ஷன் அனிமேஷன் படமாக விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

 
லைவ் ஆக்ஷன் அனிமேஷன் படமான தி ஜங்கிள் புக் உலகம் முழுவதும் கரன்சியை அள்ளியது. அதனால், டிஸ்னி தி லயன் கிங் படத்தில் அதிகம் ஆர்வம் காட்டுகிறது.
 
தி ஜங்கிள் புக் படத்தை அற்புதமாக இயக்கிய Jon Favreau இந்தப் படத்தையும் எடுக்கிறார். லயன் கிங் உலகம் முழுவதும் அறிந்த கதை என்பதால் படம் தி ஜங்கிள் புக்கை தாண்டி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்