ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் - ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் புதிய படம்

வியாழன், 5 மார்ச் 2015 (15:39 IST)
டின் டின் மோஷன் கேப்சர் திரைப்படத்துக்குப் பிறகு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கும் படத்துக்கு, ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
ஸ்பீல்பெர்க்கின் விருப்ப நடிகர் டாம் ஹங்க்ஸ் நடிக்கும் இந்தப் படம் கோல்ட் வார் காலத்தில் நடக்கும் கதை. த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. படப்பிடிப்பு தொடங்கும் போது படத்துக்கு பெயர் வைக்கவில்லை. அன் டைட்டில்ட் கோல்ட் வார் த்ரில்லர் என்றே அழைத்தனர். பிறகு செயின்ட் ஜேம்ஸ் ப்ளேஸ் என்ற பெயர் தற்காலிகமாக வைக்கப்பட்டது. சில தினங்கள் முன்புதான், ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் பெயர் உறுதி செய்யப்பட்டது.
 
இதன் திரைக்கதையை மேட் சேர்மன். பிறகு ஆஸ்கர் வென்ற ஜோயல் கோய்ன், ஈதன் கோய்னால் திருத்தி எழுதப்பட்டது. டிஸ்னியின் டச்ஸ்டோன் படத்தை வெளியிடுகிறது.
 
2015 அக்டோபர் 16 படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்