போதும் நிறுத்துங்க.. முடியல..! வசூல் மன்னன் ஸ்பைடர்மேன்! – வாய்பிளக்கும் ஹாலிவுட்!

திங்கள், 3 ஜனவரி 2022 (12:48 IST)
மார்வெல் சூப்பர்ஹீரோ படமான ஸ்பைடர்மேன் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வசூலில் இமாலய சாதனை படைத்துள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமான மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர்ஹீரோ படங்களில் முக்கியமான படமான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் கடந்த டிசம்பர் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் முன்னதாகவே வெளியான ஸ்பைடர்மேனுக்கு முன்பதிவு தொடங்கியபோதே 1.50 லட்சம் பேர் ஒரே நாளில் முன்பதிவு செய்திருந்தனர்.

படம் வெளியாகி ஒருமாதம் கூட முழுவதும் ஆகாத நிலையில் படத்தின் வசூல் உலகளவில் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் ஸ்பைடர்மேனின் வசூல் ரூ.10,200 கோடி. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.260 கோடி வசூலாகியுள்ளது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றி ஹாலிவுட்டில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்களை திக்குமுக்காட செய்துள்ளது. அதேசமயம் இதற்கு இணையான வசூலை மார்ச் மாதம் வெளியாகும் பேட்மேன் திரைப்படம் பெற வேண்டும் என டிசி ரசிகர்களும் வாஞ்சையுடன் காத்திருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்