கலங்கடிக்க வரும் மெல் கிப்சனின் ஹாக்சா ரிட்ஜ்

வியாழன், 29 செப்டம்பர் 2016 (17:48 IST)
மெல் கிப்சன் இதுவரை 4 படங்கள் இயக்கியிருக்கிறார். நான்குமே ஹிட்.

 
முதல் படம், தி மேன் வித்தவுட் ஏ ஃபேஸ். இரண்டாவது உலகம் அறிந்த, பிரேவ் ஹார்ட். கமலே இந்த பிரேவ் ஹார்ட் படத்தைதான் தனது மருதநாயகத்துக்கு முன்மாதிரியாகக் கொண்டிருந்தார். ஆனால், பிரேவ் ஹார்ட்டில் வரலாறை மெல் கிப்சன் இஷ்டத்துக்கும் திரித்திருக்கிறார் என்று இன்னும் அவர் மீது வெறியில் சிலர் இருக்கிறார்கள்.
 
அடுத்து தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட். ஆங்கிலம் அல்லாத மொழிப் படங்களில் அதிகம் வசூலித்தது இந்தப் படம்தான். அதையடுத்து அபோகலிப்டோ. மாயன் மொழி பேசும் மக்களை வைத்து கற்பனையாக எடுத்த படம். இதிலும் மொழி ஆங்கிலம் கிடையாது. இன்றும் இந்தப் படத்தை ரசிக்கிறார்கள்.
 
கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு ஹாக்சா ரிட்ஜ் என்கிற படத்தை மெல் கிப்சன் இயக்கியிருக்கிறார். இந்த மாதம் 4-ஆம் தேதி வெனிஸ் திரைப்பட விழாவில் படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். நவம்பரில் இந்தப் படம் திரைக்கு வருகிறது.
 
மெல் கிப்சன் படங்களில் அதிகமிருப்பது வன்முறை. இதிலும் அது கலங்கடிக்கும் என்கிறார்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்