ஆசியாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் அதிரடி ஆக்சன் நாயகர் ஜாக்கிசான். இவர் கடந்த 1982ஆம் ஆண்டு தைவான் நடிகை ஜோன் லினை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்றுதான் இதுவரையில் அனைவரும் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் ஜோன் லின் தனது காதலியாக இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்ததாகவும், அதனால் அவர் கர்ப்பமானதாகவும், கர்ப்பத்தின் கட்டாயம் காரணமாகவே அவரை திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டது என்றும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.