யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்த சுல்தான்

செவ்வாய், 12 ஜூலை 2016 (13:36 IST)
இந்திய திரைப்படங்கள் எப்போதாவதுதான் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸின் டாப் 10 -க்குள் இடம்பிடிக்கும். சல்மான் கானின் சுல்தான் அந்த கௌரவத்தை பெற்றிருக்கிறது.



சென்ற வாரம் யுஎஸ்ஸில் முக்கியமான பல படங்கள் வெளியாயின. மை அண்ட் டேவ் நீட் வெடிங் டேட்ஸ், த சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் படங்களும் சென்ற வாரம் வெளியானவையே. அத்துடன், பைண்டிங் டோரி, த லெஜென்ட் ஆஃப் டார்சான், த பர்ஸ் - எலெக்ஷன் இயர், சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ், த பிஎஃப் ஜி என்று போட்டிக்கு நிறைய படங்கள்.

சென்ற வார யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 2.4 மில்லியன் டாலர்களுடன் சுல்தான் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் யுஎஸ் வசூல் 3.4 மில்லியன் டாலர்கள்.

பெருமைக்குரிய விஷயம்தான்.



வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்