ஸ்னைடருக்கு மட்டும்தான் மரியாத..! – பிரபல ஹாலிவுட் நிறுவனத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

புதன், 26 அக்டோபர் 2022 (16:34 IST)
பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ரதர்ஸுக்கு எதிராக டிசி சூப்பர்ஹீரோ ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிரபல ஹாலிவுட் இயக்குனரான ஸாக் ஸ்னைடரின் ரசிகர்களுக்கும், வார்னஸ் ப்ரதர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. 2008ல் மார்வெல் ஸ்டுடியோஸ் தனது சினிமாட்டிக் யுனிவர்ஸை தொடங்கியபோது, டிசி சூப்பர்ஹீரோக்களின் சினிமாட்டிக் யுனிவர்ஸை வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் தொடங்கியது.

டிசி சூப்பர்ஹீரோ படங்களை வழிநடத்தி கொண்டு செல்லும் பொறுப்பை பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸாக் ஸ்னைடரிடம் ஒப்படைத்தது வார்னர் ப்ரதர்ஸ். அவரது வழிகாட்டலிலும், இயக்கத்திலும் மேன் ஆப் ஸ்டீல், சூப்பர்மேன் வெர்சஸ் பேட்மேன், வாட்ச்மென் உள்ளிட்ட படங்கள் வெளியாகியது.

ALSO READ: ''காந்தாரா'' இந்தியாவின் சிறந்த படம் - சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு

ஸாக் ஸ்னைடர் ஜஸ்டிஸ் லீக் இயக்கிக் கொண்டிருந்தபோது அவரது மகள் துரதிர்ஷ்டவசமாக இறந்து போனார். இதனால் அந்த ப்ராஜெக்டில் இருந்து அவர் வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அதனால் அந்த படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ஜாஸ் வேடனை வைத்து இயக்கி வெளியிட்டனர். ஆனால் அது ரசிகர்களுக்கு பிடிக்காததால் தோல்வியை தழுவியது.

அதேசமயம் ஸாக் ஸ்னைடர் இயக்கிய ஜஸ்டிஸ் லீக் படத்தை வெளியிடுமாறு வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்திற்கு ரசிகர்கள் மிகுந்த அழுத்தம் கொடுத்து வந்ததால் கடந்த 2020ம் ஆண்டில் ஸாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் ஓடிடி வழியாக வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட படமாக சாதனை படைத்தது.

அதிலிருந்து மீண்டும் டிசி சினிமாட்டிக் யுனிவர்ஸ் வழிநடத்தல் பொறுப்பை ஸாக் ஸ்னைடருக்கு வழங்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு எதிராகவே எல்லாத்தையும் செய்யும் வார்னர் ப்ரதர்ஸ் தற்போது டிசி சினிமாட்டிக்கின் வழிநடத்தல் பொறுப்பை இயக்குனர் ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சஃப்ரானிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்துள்ள டிசி ரசிகர்கள் ஸாக் ஸ்னைடரை முன்னிறுத்தி வார்னர் ப்ரதர்ஸை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் #BoycottWB என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்