பேட்மேன், சூப்பர்மேனை பின்னுக்கு தள்ளிய அனிமேஷன் படம்

செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (17:08 IST)
பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் - டான் ஆஃப் ஜஸ்டிஸ் திரைப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் பெரும் வசூலை பெற்றது.


 


அதன் பிறகு வசூல் அதிரடியாக குறைந்தது. மூன்று தினங்களில் யுஎஸ்ஸில் 150 மில்லியன் டாலர்களை தாண்டிய படம், முதல் 17 தினங்களில் 296.61 மில்லியன் டாலர்களை வசமாக்கியுள்ளது. 
 
உலகம் முழுவதும் சேர்த்து இந்த சூப்பர்ஹீரோ படத்தின் வசூல், 784.31 மில்லியன் டாலர்கள். அதேநேரம் அனிமேஷன் படமான ஸுட்டோபியா பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் படத்தைவிட அதிகம் வசூலித்துள்ளது.
 
யுஎஸ்ஸில் கடந்த ஞாயிறுவரை 296 மில்லியன் டாலர்களை குவித்த படம் உலக அளவில் 852.50 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது. கிட்டத்தட்ட 68 மில்லியன் டாலர்கள் அதிகம். 
 
சூப்பர்ஹீரோக்களைவிட அனிமேஷன் படங்கள்தான் இப்போது அசத்துகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்