இந்திய வரலாற்றில் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி: அம்பானி புகழாரம்

Siva

புதன், 10 ஜனவரி 2024 (13:45 IST)
இன்று குஜராத்தில் ’துடிப்பான குஜராத்’ என்ற பெயரில் 10வது உச்சி மாநாடு தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி  இந்திய வரலாற்றிலேயே நரேந்திர மோடி வெற்றிகரமான பிரதமர் என புகழாரம் சூட்டியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது
 
சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் பசுமை ஆற்றலைத் தயாரிக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் ’திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி கிகா காம்ப்ளக்ஸ்’ ஜாம்நகரில் 5000 ஏக்கர் அளவில் அமைக்கப்பட்டு, அதில் பசுமை ஆற்றல் எரிபொருட்கள் தயாரிக்கப்படும் என்றும் கூறினார்.

ALSO READ: ஜப்பான், இந்தோனேஷியாவை அடுத்து இந்தியாவிலும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு
 
மேலும், இந்தியாவில் ’கார்பன் ஃபைபர்’ வாயிலாக 5ஜி சேவையை ஹசிராவில் முதல்முறையாக நிறுவ ரிலையன்ஸ் திட்டமிட்டிருப்பதாகவும், 5ஜி மற்றும் ஏஐ (AI) தொழில்நுட்பம் சார்ந்து பல வேலை வாய்ப்புகளின் மையமாக குஜராத் திகழும் என்றும் கூறினார்.
 
 கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.12 லட்சம் கோடி தொழில் முதலீடு செய்துள்ள நிலையில் இதில் மூன்றில் ஒரு பங்கு குஜராத்தில் தான் செய்துள்ளது என்றும், எங்கள் நிறுவனம் எப்போதும் "குஜராத்தின் சொத்து என்றும் அவர் கூறினார்,
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்