ரேப்பிஸ்டை அம்பலப்படுத்தியவரின் கதை

வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (18:02 IST)
நடிகர் பிராட் பிட் தனது பிளான் பி தயாரிப்பு நிறுவனம் சார்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். அதற்காக பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை ஒன்றின் உரிமையை முறைப்படி வாங்கியுள்ளார். அதுவொரு உண்மைச் சம்பவம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் நார்த்தப் என்ற கறுப்பின இளைஞனின் 12 வருடகால அடிமை வாழ்க்கையை 21 ஆம் நூற்றாண்டில், 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் என்ற படமாக எடுக்க காரணமாக இருந்தவரும் பிராட் பிட்தான். இவரின் பிளான் பி நிறுவனம்தான் அப்புத்தகத்தின் உரிமையை வாங்கி வேறு சிலருடன் இணைந்து படத்தை தயாரித்தது. தனது குழந்தைகளின் விருப்பத்தின் பேரில், சாலமனை மீண்டும் சுதந்திர மனிதனாக்கும் முயற்சியை மேற்கொண்ட கனடா வெள்ளைக்காரராக சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார்.
 
அடுத்து அவர் தயாரிக்கப் போவதும் உண்மைச் சம்பவம்தான். ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு ரேப்பிஸ்ட்களை ஒரு ஹேக்கர் (ஆரம்பம் ஆர்யா மாதிரி) அம்பலப்படுத்திய நிகழ்வைதான் படமாக்குகிறார். அந்த ஹேக்கர், அடையாளத்தை மறைத்தல், (ரேப்பிஸ்டுகளை) மிரட்டுதல் போன்ற குற்றங்களுக்காக ஜெயிலில் தள்ளப்பட்டது தனிக்கதை.
 
இந்த சம்பவத்தை பிளான் பி யும், ஜேம்ஸ் பேக்கர்ஸின் கேட் பாக் என்டர்டெய்ன்மெண்டும் இணைந்து தயாரிக்கின்றன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்