மீண்டு வருவாரா மனோஜ் நைட் சியாமளன்?

சனி, 1 ஜூன் 2013 (11:27 IST)
FILE
சிக்ஸ்த் சென்ஸ், அன் பிரேக்கபிள் என்று மனோஜ் நைட் சியாமளனின் சினிமா கேரியர் தொடங்கிய போது அடுத்த ஆல்பிரட் ஹிட்ச்காக், அடுத்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் என்று உலகம் கொண்டாடியது. அவரே அடுத்தடுத்தப் படங்களில் சறுக்கி த லாஸ்ட் ஏர்பென்டர் படத்தில் மொத்தமாக மண்ணைக் கவ்வ... அவ்வளவுதான் சியாமளன் என்று ஏறக்குறைய அவரை மறந்தே போனார்கள்.
FILE

இப்படியொரு சூழலில்தான் வில் ஸ்மித் அவரது மகன் ஜேடன் ஸ்மித் நடித்திருக்கும் ஆப்டர் எர்த் திரைக்கு வருகிறது. இயக்கியவர் மனேஜ் நைட் சியாமளன்.

இதில் ஜிடன் ஸ்மித்துக்குதான் அதிக வேலை. உலகம் அழிந்து ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு...

வேற்று கிரகத்திலிருந்து வரும் அப்பா, மகனான வில் ஸ்மித்தும், ஜேடன் ஸ்மித்தும் விபத்துக்குள்ளாகி அழிந்து போன பூமியில் மாட்டிக் கொள்கிறார்கள். அப்பா பலத்த காயம்பட மகன் எப்படி அவரை காப்பாற்றுகிறான் என்பது கதை.
FILE

ஹாலிவுட்டின் டாப் நடிகர் வில் ஸ்மித் இருந்தாலும் ஆப்டர் எர்த் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்குமா என்பதில் ஹாலிவுட்காரர்களுக்கு ரொம்பவே அவநம்பிக்கை. காரணம் மனோஜ் நைட் சியாமளன். வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கும் இப்படம் வெற்றி, சனி, ஞாயிறில் மொத்தமாக 40 லிருந்து 50 மில்லியன் டாலருக்குள்தான் வசூலிக்கும் என கணித்திருக்கிறார்கள். சென்ற வாரம் வெளியான பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படம்தான் ஆப்டர் எர்த்தைவிட அதிக வீக் எண்ட் கலெக்ஷனுடன் முதலிடத்தைப் பிடிக்கும் என கணித்திருக்கிறார்கள்.

ஜேடன் ஸ்மித் நடிப்பில் 2010 ல் வெளியான த கரத்தே கிட் படமே வார இறுதியில் 55 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கும் நிலையில் வில் ஸ்மித், ஜிடன் ஸ்மித் இணைந்து நடித்திருக்கும் படம் 50 மில்லியன் டாலர்களை எட்டுவது சந்தேகம் என்று ஹாலிவுட் சொன்னால் மனேஜ் நைட் சியாமளன் மீது எந்தளவு நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்