இந்தியாவின் வட மாநிலங்களில் வண்ணமயமான ஹோலி பெருநாள் கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலம். சாலைகள் எங்கும் குழைத்து வைத்த வண்ணத்தை வாரி இறைத்து, பார்ப்பவர்களின் முகங்களில் சரிசமமாகப் பூசி மகிழும் புதுமையான திருவிழா இது.
அறுவடையைக் கொண்டாடடுவதோடு, அடுத்து வரும் வசந்த காலத்தில் இயற்கை வளம் செழிப்பாக இருந்து மனிதர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே இந்தப் பண்டிகையின் நோக்கம். அதற்காகத்தான் வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றொருவர் மீது வாரி இறைத்துக்கொண்டு, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.