பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம். அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம். நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. (திங்கள் என்றால் சந்திரன்). நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று (15 நாட்கள் அமாவாசையாகவும்) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.
சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது. அவ்வேளையில் சூரியனின் சக்தியும், சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித அதிர்வு ஏற்படுகிறது. அந்த அதிர்வு பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.
இதன் காரணமாக அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த நல்ல காரியங்கள் தவிர்த்ததோடு, முடிவு எடுப்பதையும் தவிர்த்தனர்.