இந்நிலையில், கூகுள் நிறுவனம் இனிமேல் தனது பயனாளர்களுக்கு தானாகச் செயல்படும் 2 காரணி அங்கீகாரத்தை( two factor authentication) என்ற பாதுகாப்பு முறையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பிசி வேர்ஸ்ட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
இது பயனாளர்களுக்கு புதிய மற்றும் பலமான பாதுகாப்பை அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 2 காரணி அங்கீகாரத்தினால் பயனாளர்களின் தகவல்களைத் திருட முடியாது என கூகுள் தெரிவித்துள்ளது. இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது