புரட்டாசி மாதத்தில் அதிக வழிபாடுகளை மேற்கொள்ள காரணம் என்ன...?

திங்கள், 10 அக்டோபர் 2022 (14:36 IST)
புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்கு பெருமை சேர்க்கிறது.


பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில் தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள்  கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும்.

புரட்டாசி மாதம் அதிக வழிபாடுகள் நடத்த வேண்டிய மாதமாகும். புரட்டாசியில் வீடு கட்டும் பணியை தொடங்கினால் உடல் நலம் பாதிக்கும் என்று வாஸ்து குறிப்புக ளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாத அமாவாசை தினத்தன்று பிறந்தவர்கள் ஆராய்ச்சிகள் செய்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். அன்றைய வழிபாடுகள் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடையச் செய்யும்.

கல்வித் தடை, திருமணத் தடை, நோய், பணப் பிரச்சினை உள்ளவர்கள் புரட்டாசி திருவோணம் தினத்தன்று பெருமாளை வழிபட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்.

Edited by Sasikala

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்