நாக தோஷம் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?

Mahendran

வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (19:12 IST)
நாக தோஷம் உள்ளவர்கள் நாக சதுர்த்தி தினத்தன்று நாக வழிபாடு செய்தால் நாக தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
 
ஆடி அல்லது ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தான் நாக சதுர்த்தி என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சதுர்த்தி விநாயகருக்கு உரியது என்பதால் இந்த சதுர்த்தியை நாகங்களுக்கு உரிய நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
எனவே நாக சதுர்த்தி அன்று நாகதோஷம் உள்ளவர்கள் நாகத்துக்கு என்று இருக்கும் சில கோயில்களில் வழிபாடு செய்தால் நாக தோஷத்திலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது.
 
நாகப்பட்டினம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நாக நாதர் கோயில் உண்டு, அங்கு சிறப்பு வழிபாடு செய்து நாக தோஷம் வழிபாடு செய்ய வேண்டும்.
 
மேலும் அரச மரத்தடி வேப்பமரத்தடியில் இருக்கும் நாக பிம்பங்களுக்கு பாலாபிஷேகம் செய்தும் நாகதோஷத்தில் இருந்து விடுபடலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்