ஆசைப்பட்ட வேலை கிடைக்க எந்த கடவுளை வணங்க வேண்டும்?

செவ்வாய், 20 ஜூன் 2023 (18:20 IST)
ஆசைப்பட்ட வேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை கிடைத்த வேலையை தான் வேறு வழி என்று செய்து வருகின்றனர். அந்த வகையில் முழு முதல் கடவுளான விநாயகர் பெருமானை வணங்கினால் ஆசைப்பட்ட வேலை கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
பிள்ளையாருக்கு கற்பூரவல்லி இலையின் மீது பிரியம் அதிகம் என்பதால் கற்பூரவல்லி இலைகளை மாலையாக கோர்த்து ஒவ்வொரு புதன்கிழமையும் வழிபட்டால் ஆசைப்பட்ட வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. 
 
கற்பூரவல்லி இலைகள் கிடைக்கவில்லை என்றால் செவ்வாழை பழங்களை மாலையாக கோர்த்து 12 வாரங்கள் விநாயகருக்கு சாத்தி வழிபடலாம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 12 வாரங்கள் செய்தால் கண்டிப்பாக ஆசைப்பட்ட வேலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது 
 
ஒவ்வொரு வாரமும் விரதம் இருந்து பிள்ளையாரை முழு மனதாக வணங்கினால் கிடைத்த வேலைக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்