விநாயகர் சதூர்த்தி தினத்தில் பிள்ளையாரை பூஜிப்பது எப்படி?

புதன், 16 ஆகஸ்ட் 2023 (19:36 IST)
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் வரும் விநாயகர் சதுர்த்தி தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து  பிள்ளையாரை பூஜை செய்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். 
 
குறிப்பாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் களிமண்ணில் செய்த பிள்ளையாரை பூக்கள் மற்றும் இலைகளால் அலங்கரித்து வீடுகளில் வைத்த பூஜை செய்யலாம். 
 
 வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் கோவிலுக்கு சென்று பூஜை செய்யலாம்.. பூஜையில் வைத்த விநாயகரை அடுத்த ஒரு சில நாட்களில் ஆற்றில் அல்லது கடலில் கரைக்க வேண்டும் என்பது முக்கியம்.
 
 மேலும்  விநாயகரின் திருப்புகழ் பாடல்களை அன்றைய நாள் முழுவதும் பாடிக்கொண்டே இருந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்