ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவது ஏன்?

சனி, 16 டிசம்பர் 2023 (18:58 IST)
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை மற்றும் வடைமாலை சூட்டுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் வெற்றிலை மாலை சூட்டப்படுவது ஏன் என்பதற்கு ஒரு  கதை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சீதா தேவியை அனுமார் அசோகவனத்தில் சந்தித்தபோது சீதை அவரை வெற்றிலையை எடுத்து தலை உச்சியில் வைத்து சிரஞ்சீவியாக வாழ்வாயாக என்று ஆசீர்வாதம் செய்தார் 
 
அன்று முதல் அனுமார்  சிரஞ்சீவியாக இருப்பதாக ஒரு நம்பிக்கை ஆன்மீகவாதிகள் மத்தியில் உள்ளது. ஆகவே ஆஞ்சநேயர் போல் சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆஞ்சநேயரை வழிபடும் போது வெற்றிலை மாலையாக தொடுத்து  மாலை சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றார்கள் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்