நாளை சர்வ ஏகாதேசி.. விரதம் இருந்தால் கோடி நன்மைகள்.!

செவ்வாய், 13 ஜூன் 2023 (18:15 IST)
நாளை புதன்கிழமை சர்வ ஏகாதேசி தினத்தை முன்னிட்டு விரதம் இருந்தால் கோடி நன்மைகள் ஏற்படும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
புதன்கிழமையும் ஏகாதேசியும் இணைவது ஒரு அற்புதமான நாள் என்றும் அந்த நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் செம்மையாகவும் சிறப்புடனும் வாழலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
மார்கழி மாத ஏகாதேசி, வைகுண்ட ஏகாதேசி போன்ற சிறப்புடையது புதன்கிழமை வரும் ஏகாதேசி என்றும் இந்த தினத்தில் பெருமாளை ஆராதித்து பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாட்டுவது குடும்பத்திற்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. 
 
புளியோதரை அல்லது தயிர் சாதம் நெய்வேத்தியம் செய்து பெருமாளை பிரார்த்தனை செய்ய ஆன்மீகவாதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்