கன்னியாகுமரியில் ‘கடல் திருப்பதி’: குவியும் பக்தர்கள்..!

செவ்வாய், 6 ஜூன் 2023 (19:01 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயில் இருப்பதைப் போலவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டிய கன்னியாகுமரியில் உள்ள ஏழுமலையான் கோவில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்று வருகிறது. 
 
கடல் ஓரத்தில் இருப்பதால் இந்த கோயிலை ‘கடல் திருப்பதி என்று பக்தர்கள் அழைத்து வருகின்றனர். ஏற்கனவே கன்னியாகுமரியில் மகுடம் சூட்டும் வகையில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் காந்தி மண்டபம் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு சிறப்பாக இந்த ‘கடல் திருப்பதி கோயில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வருகிறார்கள் என்பதும் திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்ற பக்தர்களின் நம்பிக்கையை போலவே கடல் திருப்பதியை சென்று வணங்கினாலும் திருப்பம் வரும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. 
 
இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக உண்டியல் வருமானம் மற்றும் வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்