எழுந்திரு. இதோ வலியன் பறவைகள் (குருவி) தங்கள் துணையுடன் சேர்ந்து `கீசுகீசு' என்று பேசும் ஒலி, எல்லா இடங்களிலும் கேட்கிறது பார். அது உன் காதில் விழவில்லையா? நறுமணம் வீசும் கூந்தலைக் கொண்ட ஆய்ச்சியர்கள் (தாங்கள்) அணிந்திருக்கின்ற காசுமாலை, பலவகை வடிவங்களாகச் செய்து கோக்கப்பட்ட மாலை, ஆகியவை சப்தமிடும்படியாக, கையை முன்னும் பின்னும், மாற்றி மாற்றித் தயிர் கடைகின்ற ஓசை உன் காதில் விழவில்லையா?
எங்களுக்கெல்லாம் தலைவியான நீ, இப்படிச் செய்யலாமா? நாங்கள் யாரைப்பற்றிப் பாடிக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? நாராயணனை, பல யுகங்களிலும் பலவிதமான திருமேனிகள் கொண்டு அவதரித்த சுவாமியை, கேசியென்னும் அரக்கனைக் கொன்ற கண்ணனை-இப்படிப்பட்ட சுவாமியை, நாங்கள் புகழ்ந்து பாடுவதைக் கேட்கும் நீ இப்படிப் படுத்துக் கிடக்கலாமா?