தமிழ் புத்தாண்டு 2024: குபேர வாழ்வு தரும் குரோதி வருடம் பிறப்பு!

Prasanth Karthick

செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (16:02 IST)
தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் வரும் புதிய குரோதி ஆண்டு வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் அருளும் நாளாகும்.



சித்திரை முதல் நாள் தமிழர் மரபுப்படி தமிழ் புத்தாண்டாக பல காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழில் 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் இடம்பெறுகின்றன. அந்த வகையில் வரும் சித்திரை முதல் நாளில் ஸ்ரீ சோபகிருது ஆண்டு முடிந்து புதிய ஸ்ரீ குரோதி வருடம் தொடங்குகிறது.

குரோதி வருடத்தின் முதல் நாளில் சூரியனின் கட்டத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை சஷ்டி திதியில் திருவாதிரை நட்சத்திரம் கூடிய சிறப்பான நேரத்தில் மிதுன ராசி அதிகண்ட யோகத்தில் புதிய வருடத்தின் முதல் நாள் தொடங்குகிறது.

சூரிய பகவான் மேஷ ராசியின் மீது உச்சம் காண்கிறார். இந்த ஆண்டு பல வகையில் பல ராசிக்காரர்களுக்கும் பல மாற்றங்களை தரும் நாளாக அமைய உள்ளது.

ALSO READ: பங்குனி மாத சர்வ அமாவாசை.. ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்..!

சூரியன், குரு பகவான் சேர்க்கை புதுவருடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுற நிகழும் ஆச்சர்யம் என்பதால் இந்நாளில் சூரிய பகவான் உள்ளிட்ட நவக்கிரகங்களை உருகி வேண்டுவோருக்கு பூரண ஆயுளும், உடல் நலமும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியமும், குடும்பஸ்தர்களுக்கு தொழில் முன்னேற்றமும் ஏற்படும் ஆண்டாக இந்த குரோதி வருடம் அமையும் என ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இந்த சிறப்பான நாளில் அதிகாலை எழுந்து நீராடி சூரிய நமஸ்காரம் செய்து இஷ்ட தெய்வங்களை வழிபடலாம். புது வருடத்தில் தாம்பூல தட்டில் தாம்பூல பொருட்கள், நவதானியங்கள், மா, பலா, வாழை வைத்து பூஜையறையில் வைத்து வழிபடுவது கூடுதல் சிறப்பை தரும்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்