சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்...

வியாழன், 18 அக்டோபர் 2018 (15:17 IST)
இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்திய சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள் பின்வருமாறு உள்ளன.இவை நம் வாழ்விற்கும் உள்ளத்திற்கும் ஒளிதந்து வாழ்நாட்களை பயணுள்ளதாக்க உதவும். 
நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும். உங்கள் குரல் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். நீங்கள் மனித குலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்.
 
உடலையும் புலன்களையும் வழிநடத்தும் போது, மனம் என்ற கடிவாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். சிறு சிறு ஆசைகளை அனுபவித்துத்தீர்க்க வேண்டும். பெரிய ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டுவிட வேண்டும்.
 
இல்லறத்தில் வாழ்ந்தபடியே காமத்தையும், பணத்தாசையையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள். மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை. செயல்முறையில்  தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது தான் மதத்தின் முழுப்பரிமாணமாகும்.
 
ஒருவன் தன்னை வெறுக்கத் துவங்கிவிட்டால், அவன் கீழ்நிலைக்குச் செல்வதற்கான கதவு திறந்துவிட்டது என்று பொருள். எந்த வேலையாக இருந்தாலும், அதனைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி. எந்த வேலையும் அற்பமானதல்ல.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்