பத்மநாபபுரம் அரண்மனை தெரியும்.. இந்த கோவில் யாருக்காவது தெரியுமா?

வியாழன், 24 நவம்பர் 2022 (17:34 IST)
பத்மநாபபுரம் அரண்மனை தெரியும்.. இந்த கோவில் யாருக்காவது தெரியுமா?
பத்மநாபபுரம் என்றால் உடனே அனைவருக்கும் பத்மநாபபுரம் அரண்மனை தான் ஞாபகம் வரும். இந்த நிலையில் பத்மநாபபுரத்தில் கல்குளம் நீலகண்ட ஸ்வாமி என்ற கோயில் உள்ளது என்பதும் 12 சிவாலயங்களில் ஒன்றான இந்த கோயில் மிகவும் பழமையான கோயில் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
பத்மநாதபுரம் அரண்மனையில் இருந்து ஆட்சி புரிந்த மன்னர்கள் இந்த கோவிலில்தான் தரிசனம் செய்வார்கள் என்றும் அரண்மனையில் இருப்பவர்களுக்காகவே இந்த கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது 
 
ராஜகோபுரம் தெப்பக்குளம் சிற்பங்கள் என கலையம்சத்துடன் கட்டப்பட்ட இந்த கோயில் எப்போது கட்டப்பட்டது என தெரியவில்லை என்றாலும் பழம்பெரும் கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது
 
 இந்த கோவிலில் சிவலிங்கம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்பதும் மேலும் மேற்கு பக்கத்தில் ஆதிசிவன் காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லிங்கத்தின் உயரம் 160 சென்டி மீட்டர் என்றும் இது சுயமாக வளர்ந்தது என்பதும் ஐதீகமாக கூறப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்