இந்த எண்ணெய்யில் தீபம் ஏற்றும் போது, ஒரு நல்ல நறுமணம் உங்கள் வீடு முழுவதும் பரவி இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியும், எதிர்மறை ஆற்றலும் தானாகவே விலகும்.
வளர்பிறை நாட்களில் மூன்று பச்சை கற்பூரத்தை எடுத்து சிவப்பு பருத்தி துணியில் முடித்து நாம் வழிபடும் பூஜை அறையில் மகாலட்சுமியின் முன் வைத்து மேலும் கற்கண்டு வாழைப்பழம் வைத்து நெய்வேத்தியம் படைத்து ஓம் மகாலட்சுமியை நமஹ என்று சில மணி நேரம் தியானத்தில் இருந்தால் உங்கள் வீட்டில் செல்வ கடாட்சம் அதிகரிக்க செய்யும்.