குழந்தை வரம் இல்லாதவர்கள் உடனே செல்ல வேண்டிய கோவில் இதுதான்..!

Mahendran

வெள்ளி, 2 மே 2025 (18:45 IST)
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள ஒழுகை மங்கலத்தில், சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் பக்தர்களின் விசுவாசத்துக்கு மையமாக உள்ளது. சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், அம்மன் சுயம்பு ரூபத்தில் அருள்பாலிக்கிறார்.
 
தல புராணம் படி, ஒரு காலத்தில் இங்கு மாடுகள் மேயும் வனம் இருந்தது. ஒரு மாடு தினமும் ஒரு இடத்தில் நின்று பால் சுரப்பதை கண்டு, அந்த இடத்தில் தோண்டியபோது அம்மன் சிலை வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. பசுவின் பால் (ஒழுகை) வழிந்ததால், இந்த இடம் “ஒழுகை மங்கலம்” என பெயர் பெற்றது.
 
கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. துவஜ ஸ்தம்பம், பலிபீடம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவையும் உள்ளன. கருவறையில் அம்மன் சுயம்புவாக உள்ளார். விநாயகர், நாகர்கள், கருப்பண்ண சுவாமி, காத்தவராயன், பேச்சி அம்மன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.
 
ஆடி மாதம், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப ஒற்றுமை போன்ற நலன்களை நாடி, பக்தர்கள் வேப்பமரத்தில் மஞ்சள் நூல் கட்டியும், கோவில் குளத்தில் தீர்த்தம் அருந்தியும் வேண்டுகிறார்கள்.
 
திருவிழாக்கள் – சித்திரை புத்தாண்டு, பங்குனி திருவிழா, நவராத்திரி, தைப்பொங்கல், ஆடிப்பெருக்கு ஆகியவை விமர்சையாக நடைபெறுகிறது.
 
தரிசன நேரம்: காலை 8.30–12.30, மாலை 5.00–8.30.
இடம்: திருக்கடையூரிலிருந்து 6 கிமீ தொலைவில், ஒழுகை மங்கலம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்