கோலங்களில் பலவகை உண்டு. ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்ய கோலம், ஸ்ரீ சக்கர கோலம் என்று பல வகையான கோலங்கள் உண்டு. இதில் அதில் குறிப்பாக நவக்கிரகத்திற்கென்று தனிப்பட்ட கோலங்களும் உண்டு.
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கோலம் வீதம் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு கோலம் போடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்தந்த நாளுக்குரிய கோலங்களை பூஜையறையில் போட்டு இறைவனை வழிபட்டால் நவக்கிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள், நவகிரகங்களின் கெடுதல் பலன்களிலிருந்தும் விடுபடலாம்.
ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்ய கோலம், ஸ்ரீ சக்கர கோலம் போன்றவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசி மாவினாலும் மட்டுமே போடுவது குடும்பத்திற்கு நற்பலனை தரும்.