பௌர்ணமியன்று குளித்து, வீட்டை சுத்தம் செய்து, சுவாமி படங்களை பூக்கள் அணுவித்து, காலை ஆறு மணிக்குள் தலைவாசலில் அகல்விளக்கேற்றி, பிறகு பூஜையறையில் விளக்கேற்றி. மீண்டும் மாலை ஆறு மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். அன்றையதினம் அசைவ உணவினை தவிர்க்க வேண்டும்.
அதிலும் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது வழக்கம். நடராஜரை வழிபடும் நாளாகவும், பெண்கள் தங்கள் கணவனுக்கு நல்ல ஆயுள் கிடைக்க வேண்டும் என விரதம் இருக்கும் உன்னதமான நாள். திருமணம் ஆகாதவர்கள் விரதம் இருந்து நடராஜர், அம்பாளை வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மார்கழி மாதப் பௌர்ணமியன்று விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்.
பஞ்சபூத தலங்களில் அக்கினி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலம் நடத்தப்படுவதும், அதில் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் கலந்து கொள்வதும் வழக்கம்.
ஆனால் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாக திருவண்ணாமலையில் கிரிவலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், கிரிவலத்தில் மக்கள் பங்கேற்க தடை தொடர்ந்து வருகிறது. பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் என்றாலும் அதில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.