200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!

திங்கள், 4 செப்டம்பர் 2023 (19:03 IST)
200 ஆண்டுகள் பழமையான  மல்லிகார்ஜுனா சுவாமி திருக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். 
 
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பஜார் வீதியில் இருக்கும் மல்லிகார்ஜுனா ஸ்வாமி திருக்கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. இன்று காலை 10 மணிக்கு இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  
 
விமான கோபுரம், மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை பூசாரிகள் செய்தனர். இதனை அடுத்து மூலவருக்கு பால், இளநீர் பன்னீர் உள்ளிட்ட வாசனை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.  
 
இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை அடுத்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். அன்னதானம் உள்பட பல நிகழ்ச்சிகளுக்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்