மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் 1700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோவில். 5 நிலைகளுடன் ராஜகோபுரம் அமைந்துள்ள இந்த கோவிலில் மூலவர் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் அருள்பாலிக்கிறார். மேலும் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ ராமர், ஸ்ரீ ஹனுமன், ஸ்ரீ கருடாழ்வார் போன்ற தெய்வங்களின் சன்னதிகள் இந்த கோவிலில் உள்ளது.
* திருமணம், குழந்தை பாக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பிரார்த்தனைகளுக்கு சிறந்த தலம்.