ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசி விரதங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!
வியாழன், 6 அக்டோபர் 2022 (18:05 IST)
சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி, காமதா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி பாப மோகினி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி மோகினி ஏகாதசி என்றும், தேய்பிறை ஏகாதசி வருதித் ஏகாதசி என்றும் கூறப்படுகிறது.
ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி அபார ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி சயனி என்றும், தேய்பிறை ஏகாதசி யோகினி என்றும் பெயர்பெற்றுள்ளது.
ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது புத்ரஜா என்றும், தேய்பிறை ஏகாதசியானது காமிகா என்றும் அழைக்கப்படுகிறது.
புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி, பத்மநாபா என்றும், தேய்பிறை ஏகாதசி அஜா என்றும் பெயர் பெற்றது.
ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா என்றும், தேய்பிறை ஏகாதசி இந்திரா என்றும் அழைக்கப்படுகிறது.
கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி பிரபோதின எனப்படும். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலன் கிடைக்கும்.
மார்கழி மாத ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம்.
தை மாத வளர்பிறை ஏகாதசி புத்ரதா என்றும், தேய்பிறை ஏகாதசி சுபலா என்றும் பெயர் பெறும்.
மாசி மாத வளர்பிறை ஏகாதசி ஜெயா என்றும், தேய்பிறை ஏகாதசி ஷட்திலா என்றும் அழைக்கப்படும்.
பங்குனி தேய்பிறை ஏகாதசி விஜயா எனப்படும். அப்போது விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும்.
ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி கமலா ஏகாதசி எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.