தலை, இரு கைகள், இரு காதுகள், இரு முழங்கால், மார்பு ஆகிய எட்டு அங்கங்களும் நிலத்திலே படுமாறு விழுந்து வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம், இது ஆண்களுக்கு உரியது.
தலை, இருக்கைகள், இரு முழங்கால்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் படுமாறு விழுந்து வணங்குதல் பஞ்ச-அங்ச நமஸ்காரம் பெண்களுக்கு உரியது.
அதுபோலவே அன்பும், தொண்டும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அமைந்து அழுந்திக் கிடப்பினும் அவற்றை தூண்டி இன்பம் நல்குவதும், மனமாசுக்களைத் துடைத்து எறிவதும் விரதம் பூண்டு நாம் ஏற்கும் வழிபாடாகும்.