அதற்கு நன்றி தெரிவிக்கும விதமாக தேவர்களில் முப்பத்து முக்கோடி பேரும் இந்திரனும் சேர்ந்து திருமாலையும், லட்சுமி தேவியையும் வணங்கி ஏராளமான நவரத்தினங்கள் பொன் மணிகளைக் கொண்டு வந்து குவித்து பரிசாக அளித்தனர்.
சிவபெருமான் மட்டும் ஒரே ஒரு ருத்ராட்சத்தைக் கொண்டு வந்து கொடுத்து பெருமானிடம் நன்றி தெரிவித்திட அதை வணக்கத்துடன் வாங்கியவர் கண்களில் ஒற்றிக் கொண்டார். இதைப் பார்த்த கோலஷ்மி, "சுவாமி தேவர்கள் அனைவரும் பொன் பொருளைக் கொண்டு வந்து குவிக்கும் போது சிவபெருமான் மட்டும் தங்களை அவமானப்படுத்த ஒரு கரிய ருத்ராட்சத்தைத் தருகிறாரே "அதை தூக்கி எறியுங்கள் என்று சொன்னாள்".
இதை கேட்ட திருமால் துலாபாரத்தை எடுத்து வரச் சொல்லி அனைத்துப் பொன் பொருளையும் ஒரு தட்டில் வைக்கச் செய்து மறுதட்டில் அந்த ருத்ராட்சத்தை வைத்தார். என்னே ஆச்சர்யம்! எல்லாவற்றையும் குவித்தும் சிவனின் ருத்ராட்சத்திற்குச் சமமாக நிற்கவில்லை. அதை கண்ட லட்சுமி தேவி திருமாலிடம் மன்னிப்பு கேட்டு அதை எடுத்து வைத்துக் கொண்டாள்.
அங்கே குபேரன் தனியே நின்று கொண்டு லட்சுமி தேவி சிவபெருமான் அளித்த ருத்ராட்சத்தை என்னிடம் தூக்கி எறிந்திருப்பீர்கள் அதை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம் என்று நினைத்தேன். பரமன் கொடுத்த ஒரு ருத்திராட்சத்திற்கு என் நவநீதிகள் பொற்குவியல்களுக்கு ஈடாகுமா? ருத்ராட்சம் இருக்கும் இடம் குபேர கூடம் அல்லவா? எந்த இல்லத்தில் அந்த தெய்வமணி பூஜிக்கப்படுகிறதோ அங்கே பணக்கஷ்டம் வராது. அணிபவர்க்கு லட்சுமி குபேரர் ஆகிய நமது அருள் நிலைபெறும் என்றார்.
ருத்ராட்சத்தினுள் 18 வகையான கலைகளை (சிவமந்திரங்கள்) ஆவாகனம் செய்து வீட்டில் வைத்தால் அவ்வீடு குபேர புரியாகிறது என்பது ருத்ராட்ச விசிட்டம் என்றும் நூலின் கருத்து. ஜபால உபநிடதமும் இதையே சொல்கிறது.
அதிகாலை வேளையில் பூஜையின் போது, ஸ்ரீ ருத்ரம் அதிகாலை வேளையில் எந்த வீட்டில் ஒலிக்கிறதோ அங்கே குபேரனும், லட்சுமியும் வீட்டினுள் வருவதாக சிவபுராணம் சொல்கிறது.