துர்கை அம்மனை ஆலயத்தில் வழிபடும் முறை..!

வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (19:19 IST)
துர்க்கை அம்மனை வழிபாட்டால் எந்த துயரமும் இருக்காது என்று ஆன்மீகவாதிகள் கூறியிருக்கும் நிலையில் அந்த துர்க்கை அம்மனை ஆலயத்தில் எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்,
 
நல்ல மஞ்சள் நிறமுடைய எழுத்து எலுமிச்சம் பழங்களை வாங்கி அதை இரண்டாக வெட்டி சாறு பிழிந்து கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும். அதில் நெய் ஊற்றி  விளக்கு போல் அமைத்து விளக்கேற்றி வழிபட்டால் கோடி நன்மை கிடைக்கும். 
 
எலுமிச்சம்பழம் மஞ்சள் குங்குமம் விபூதி பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனுக்கு பூஜை செய்ய அர்ச்சகரிடம் வேண்டும் துர்க்கைக்கு எலுமிச்சை மாலை சூட்ட விருப்பம் உள்ளவர்கள் எலுமிச்சம்பழத்தை வாங்கி நம் கையாலே மாலை தொடுத்து அர்ச்சகர் மூலம் அம்மனுக்கு சாத்தலாம். 
 
மேலும் துர்க்கை அம்மனுக்கு ஒரே ஒரு எலுமிச்சம் விளக்கு ஏற்றக்கூடாது, ஜோடியாக தான் ஏற்ற வேண்டும், திருமணம் ஆக வேண்டிய பெண்கள் இதைச் சேர்ந்தால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகமாக உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்