பூஜையின்போது ஐம்பூதங்களை அங்கே ஐக்கியமானால் அவர்களின் சக்தி நமக்கு கிடைக்கும். இதில் ஆகாயம் என்பது வெட்ட வெளி. அது பூஜை அறையில் வியாபித்து இருக்கும். அடுத்து நிலம். அது நம்மை தாங்கி நிற்கும் தரை. மூன்றவதாக நெருப்பு& அது நாம் பூஜை அறையில் ஏற்றும் தீபத்தில் உள்ளது. ஆனால் தண்ணீர் அங்கு இல்லை. அதற்காக நாம் தண்ணீரையும் அங்கு வைக்கிறோம். பூஜை அறையில் தண்ணீர் வைப்பதன் மூலம் ஐம்பூங்களின் சக்தி நமக்கு கிடைக்கும் என்பதும் ஐதீகம்.