சஷ்டி திதி நாளில் எந்த செயலை செய்வதற்கெல்லாம் உகந்ததாக கூறப்படுகிறது தெரியுமா...?

செவ்வாய், 5 ஜூலை 2022 (11:55 IST)
முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம்.


வார விரதம் என்பது வ்வாய்கிழமைகளில் அனுஷ்டிப்பது. நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது. திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது.

திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும். நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும்.

வேலைக்கு சேருதல், வீடு மற்றும் வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய சஷ்டி திதி உகந்த நாளாகும்.

சஷ்டி விரதத்தின்போது முருகனுக்குரிய மந்திரங்களான ஓம் சரவணபவ, ஓம் சரவணபவாயநம, ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து, மாலை வேளை பக்கத்திலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யலாம்.

வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, உற்சாகம் வாழ்வில் நிறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்