துரும்பு, தர்ப்பம், புஷ்பம் இவைகளை நகத்தால் கிள்ளக் கூடாது. பூஜை செய்த பழங்களை நகம் படாமல் உரிக்க வேண்டும். அரைத்த சந்தனத்தை நகத்தால் வைத்தல் கூடாது. பூவை நகத்தை பயன்படுத்தி சுவற்றிலோ, தரையிலோ வைத்து துண்டிக்க கூடாது.
நம் ஊர் அல்லது வீட்டிற்கு பின்புற வழியாக வெளியே போகக்கூடாது. தூங்குபவர்களை எழுப்புவது மஹா பாவம். இந்திரியங்கள் எல்லாம் மனதில் ஒடுங்கும். எனவே அவசரமாக தூக்கத்தில் எழுந்தால் மனந்திரிந்து கண், காது சக்தி மூக்கிலும் புகும். இதனால் குருடு, செவிடு ஆக நேரும்.
பிறருடைய ஆடை, செருப்பு, மாலை, எச்சில் பாத்திரம், பலகை, படுக்கை, ஆகியவற்றை உபயோகித்தால் நோயுடன் பாவம் சேரும்.