பெருமாளை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவான் அருள் கிடைக்குமா...?

சனி, 8 அக்டோபர் 2022 (12:50 IST)
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வத்தின் அருளைப் பெறலாம். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உகந்தது.


சனி தோஷம் இருப்பவர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோவிலிற்கு சென்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதன் மூலம் சனி தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறுவர். அதோடு அஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி அர்த்தாஷ்டம சனி போன்ற சனியின் பிடியில் இருப்பவர்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை மனதார பிரார்த்திப்பதன் மூலம் சனியின் உக்கிரம் குறைந்து சனியால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் ஏற்றம் பெறுவர்.

புரட்டாசியில் விரதம் இருப்பதோடு, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் அளிப்பதன் மூலம் ஏழைகளின் பசி பறந்தோடுவது போல் நம் துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும். புரட்டாசி சனிக்கிழமைகளில் நாம் இந்த விரதத்தை மேற்கொண்டு; பெருமாள் மற்றும் குலதெய்வத்தின் அருளைப் பெறுவோம்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய பெருமாளை வேண்டி விரதம் இருப்பதால் சனிபகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரஹம் செய்கிறார்.

Edited by Sasikala

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்