காயத்ரி மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்திரர். அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக் கண்டறிந்தார். காலை, மதியம், மாலை சந்தியா வந்தனம் செய்துவரும் பிராமணர்கள் காயத்ரி மந்திரத்தினை ஜபிக்கின்றனர். காயத்ரி மந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெற்று ஜபிக்கலாம். காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க நெறியுடனும், உள்ளத்தூய்மையுடனும் இருக்க வேண்டும்.