வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, முருகன் ஆகியோருக்கு உரியது. இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். வாகனயோகம் அமையும்.
15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
வெள்ளிக்கிழமையில் மாரியம்மன் முதலான அம்மனைத் தரிசனம் செய்து வேண்டினால் நன்மை உண்டாகும். மங்காத செல்வங்கள் தந்து காத்தருள்வாள் தேவி என்பது ஐதீகம்! குறிப்பாக, ராகுகால வேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால் காரியத்தடைகள் எல்லாம் நீங்கும்.
செவ்வாயும், வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த அற்புதமான நாட்கள். செவ்வாய்க்கிழமையில், ராகுகால வேளையான மாலை 3 முதல் 4.30 மணிக்குள், துர்க்கைக்கு தீபமேற்றி வழிபடலாம்.
அதேபோல், வெள்ளிக்கிழமை ராகுகால வேளையான காலை 10.30 முதல் 12 மணிக்குள், துர்க்கையை வணங்கி எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவதும் நவகிரக சன்னிதிக்கு சென்று, ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்வதும் மிகுந்த பலனைத் தரும்.