புரட்டாசி மாத பௌர்ணமியில் விரதமிருந்தால் என்ன கிடைக்கும்?

திங்கள், 20 செப்டம்பர் 2021 (09:41 IST)
புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடையே அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு சந்திர மண்டல மத்யகா என்ற திருநாமம் உண்டு.
 
புரட்டாசி மாத பௌர்ணமி நாளில் விரதமிருந்து மாலை சந்திர உதய நேரத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்யவேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் நினைத்த காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
 
இந்த நாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் முன்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும் லட்சுமி கடாட்சம் பெருகும். ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு இரவு காலம். 
 
இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும். நடுநிசி யான புரட்டாசி மாதத்தில் முழு நிலவு நாளான பெளர்ணமி என்பது அம்பிகையின் பிரகாசம் ஆகும்.
 
புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப்பெறுவார்கள். பௌர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் இறைசக்தி கிடைக்கும் என்பது  நம்பிக்கை.
 
வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதால் தெய்வ அனுகிரகம் வீடு தேடி வரும்.
 
புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்