பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?

Mahendran

சனி, 15 ஜூன் 2024 (19:22 IST)
பெங்களூரில்   ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் ஒரு பகுதியான இஸ்கான் கோவில், ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதா அவர்களால் நிறுவப்பட்டது.  பெங்களூரு  ராஜராஜேஸ்வரி நகரில் அமைந்துள்ள இந்தகோவில்  கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரகாசமான கோவில்
 
ஸ்ரீ இராதா கிருஷ்ணா கோயில்  உலகத்திலுள்ள பெரிய அகில உலக கிருஷ்ண பக்திக் கழகக் கோயில்களில் ஒன்றாகும். ராதையின் பக்தர்களும் கிருட்டிணனின் பக்தர்களும் வழிபடும் இக்கோயிலானது, 1997 ஆம் ஆண்டு சங்கர் தயால் சர்மாவால் தொடங்கப்பட்டது. இக்கோவில், மது பண்டிட் தாசா என்பவரால், பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் ஆசிர்வாதத்துடன் கட்டி முடிக்கப்பட்டது.
 
பெங்களூரு இஸ்கானில் ஆறு அவதாரங்கள் உள்ளது.
 
முதன்மைக் கடவுள் ராதா-கிருட்டிணன்
கிருட்டிண பலராமன்
நித்தை கவுரங்கா (சைதன்யர்).
ஸ்ரீனிவாசா கோவிந்தா ( வெங்கடாசலபதி ).
பிரகலாதன் நரசிம்மர்
ஸ்ரீல பிரபுபாதா
 
இக்கோயிலானது காலை 4:15 முதல் 5:15 வரையிலும் மங்கள் ஆரத்திக்காகவும், துளசி, நரசிம்ம ஆரத்தி, சுப்ரபாதத்திற்காகவும், 5:15 முதல்7:15 வரை ஜபத்திற்காகவும், மதியம் 1:00 வரையிலும், மாலை 4:15 முதல் 8:20 வரையிலும் திறந்திருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்